உலகப் பொருளாதாரம் இந்தாண்டு மந்தநிலையில் இருக்கும்: ஐஎம்எப் எச்சரிக்கை

வாஷிங்டன்: உலகில் மூன்றில் ஒரு பகுதி நாடுகளில் இந்தாண்டு பொருளாதார மந்தநிலை நிலவும் என்று சர்வதேச நிதிய தலைவர் கிறிஸ்டாலினா எச்சரித்துள்ளார். சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனோ தொற்று, பத்து மாதங்களை கடந்து நீடிக்கும் உக்ரைன், ரஷ்யா போரினால் பணவீக்கம், வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறியதாவது:

இந்தாண்டின் உலகப் பொருளாதாரம் முந்தைய ஆண்டை காட்டிலும் மிக மோசமாக இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும். பொருளாதார பாதிப்பு இல்லாத நாடுகளில் கூட இந்தாண்டில் லட்சக்கணக்கானோர் மந்தநிலையால் பாதிக்க கூடும் வாய்ப்புள்ளது. உலக நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியில் பொருளாதார மந்தநிலை நிலவும்.

கடந்த 2021ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த உலகப் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டில் 3.2 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் இது 2.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக நிதி நெருக்கடியினால், 2001ம் ஆண்டிற்கு பிறகு, அதாவது 21 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: