கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம்.! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு கார் தீ பிடித்து எரிந்தது. பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது அவரது கார் சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார்.

பண்ட் காரை ஓட்டிச் சென்றதாகவும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூர்க்கி அருகே விபத்து நடந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அவரின் நெற்றி மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்தார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணியில் பண்ட் இடம்பெற்றிருந்தார். அவர் 46 மற்றும் 93 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: