மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 8வது நாளாக இன்றும் 6,500 கனஅடியாக நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த 6 நாட்களாக 5,600 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5,400 கனஅடியாக சரிந்துள்ளது.