இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சரிவால் தேர்தல் தள்ளிவைப்பு: சர்வதேச நிதியத்திடம் கடனுதவி பெற இலங்கை பேச்சுவார்த்தை

இலங்கை: பொருளாதார சரிவில் இருந்து மீள நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் பொருளாதர விழ்ச்சியை அடுத்து மக்களின் போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நிலைமையை சீர்செய்ய அதிபர் ரணில் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் கடனுதவி பெற பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில் அரசின் செலவினத்தை குறைக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1980-களில் 15,000-ஆக இருந்த ரானுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 2,50,000-ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு போர் ஒய்ந்த நிலையில் வீரர்கள் தற்போது காவல், பேரிடர் கால மீட்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். சம்பளம் உள்ளிட்ட பெரும் செலவுகளைக் குறைக்கும் வகையில் 16,000 வீரர்களை குறைக்கவும், இதற்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று நடைபெற்ற நிதி அமைச்சக அதிகாரிகளின் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை மேலும் ஓராண்டுக்கு தள்ளிவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போதைய நெருக்கடியான காலத்தில் தேர்தலுக்கன செலவு நாட்டில் நிலையை அதால பாதாளத்துக்கு கொண்டு செல்லும் என்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: