கள்ளிப்பாடி-காவனூர் இடையே வெள்ளாற்றில் பாலம் அமைக்க வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி, காவனூர் இடையே வெள்ளாறு அமைந்துள்ளது. இதனை கடந்து 10 ஊராட்சிகள் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ளன. இந்த 10 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பல்வேறு பணி நிமித்தமாக முஷ்ணம் ஒன்றியம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இதர பணிகளுக்கு இந்த வெள்ளாற்றை கடந்து சென்று வருகின்றனர். ஏற்கனவே ஊராட்சி ஒன்றியம் மூலம் கள்ளிப்பாடி, காவனூர் இடையே பாதை அமைத்திருந்தனர்.

 

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் மண் சாலையில் உடைப்பு ஏற்பட்டு இந்த சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் சாலை பக்கவாட்டின் இடையே சேரும் சகதியுமான பாதையில் செல்ல வேண்டி உள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. மழை காலங்களில் இதுபோன்று சாலையை கடந்து செல்லும் போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே காவனூர், கள்ளிப்பாடி இடையே மேம்பாலம் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும், என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: