ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான பரிசோதனை என தகவல்

டெல்லி : ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  63 வயதான நிர்மலா சீதாராமன் மருத்துவமனையின் எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கமான பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான நேற்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் நிதியமைச்சர் சீதாராமன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: