சீனாவை ஒட்டி உள்ள எல்லை பகுதிகளில் 120 ஏவுகணைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது

ஜம்மு காஷ்மீர்: சீனாவை ஒட்டி உள்ள எல்லை பகுதிகளில் 120 ஏவுகணைகளை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா சீனா எல்லையில் கடந்த 2 ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. 2 ஆண்டுகளில் இருதரப்பு வீரர்கள் இடையே நேரடி மோதலும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து எல்லை பகுதிகளில் சீனா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வரும் நிலையில், இந்தியாவும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வலிமையை அதிகரித்து வருகிறது. எல்லைகளில்  ஒரே பகுதிகளை எளிதில் அடையும் வகையில் சாலைகள், பாலங்கள், கட்டி வருகிறது.

தற்போது 120 ஏவுகணைகளை எல்லையில் நிறுத்த பாதுகாப்பு துறை முடிவு எடுத்துள்ளது. இதற்காக 120 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்புதலையும், பாதுகாப்பு துறை அதிகாரிகள் அளித்துள்ளார். எல்லையில் யுத்த தந்திர அடிப்படையில் ஏவுகணைகளை நிறுத்த முடிவு செய்து இருப்பது இதுவே முதல்முறை என்று குறிப்பிடத்தக்கது.

      

Related Stories: