கடன் மோசடி வழக்கில் கைதான ஐசிஐசிஐ மாஜி சிஇஓவுக்கு நாளை வரை சிபிஐ காவல்

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியில் தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஒ), நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் ஆண்டு பதவி வகித்தார். அப்போது, தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விதிமுறைகளை பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கி உள்ளார். அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த நிறுவனத்துக்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது.

இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டது.  இதுதொடர்பாக சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்துள்ளனர். பின்னர், இருவரையும் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று  ஆஜர்படுத்தியது. அப்போது, காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிபிஐ, இருவருக்கும் வரும் 26ம் தேதி (நாளை) வரை சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: