பிஜி பிரதமராக சிதிவேனி பதவியேற்பு: மோடி வாழ்த்து

மெல்பர்ன்: பிஜி பிரதமர் பதவிக்கு கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில், மக்கள் கூட்டணிக் கட்சியும், முன்னாள் பிஜி பர்ஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. இதில் ரபுகா தலைமையிலான மக்கள் கூட்டணி கட்சி 29 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியின் பிராங்க் பைனிமரமாவின் பிஜி பர்ஸ்ட் கட்சி 26 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து 74 வயதான சிதிவேனி ரபுகா பிஜியின் புதிய பிரதமராக நேற்று பதவி ஏற்று கொண்டார்.

ரபுகா ஏற்கனவே 1992 - 1999 வரை பிஜியின் பிரதமராக பதவி வகித்தவர். இவருக்கு பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: