ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடியாக அகற்றினர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் 2500 க்கு மேற்பட்ட மக்கள் வசித்த வருகின்றனர்.

பிச்சம்பட்டி நெடுஞ்சாலையில் முன்பு பயணியர் நிழல் குடை அமைக்கப்பட்டிருந்த சேதம் அடைந்து புதிய நிழல் குடை கட்டுவதற்காக அகற்றப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் புதிய நிழல் குடை கட்டப்படவில்லை.இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி நிழல் குடை அமைக்க நெடுஞ்சாலை துறையினருக்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவின் அடிப்படையில் ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு செய்து நிழல் கொடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு சிலர் வீடு மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகதெரியவந்தது. இதனையடுத்து வருவாய் துறையின் மூலம் அளவீடு செய்து நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் திருக்குமரன் மற்றும் உதவி பொறியாளர் முத்துராமன் ஆய்வாளர் சிவப்பிரித்தா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆண்டிபட்டி டிஎஸ்பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சத்யபிரியா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: