கருப்பட்டி கேழ்வரகு பணியாரம்

பக்குவம்:

இட்லி அரிசி, கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாகக் கழுவி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியதும், கெட்டியாக மாவு போல் அரைத்து சிறிது உப்பு சேர்த்து புளிக்க வைக்க வேண்டும். கருப்பட்டியை தூளாக்கி, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்களில் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்ற வேண்டும். அத்துடன் ஏலக்காய்த்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து ஒவ்வொரு குழியிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால், மாவுடன் தேங்காய்த் துருவல், நறுக்கிய முந்திரித் துண்டுகளைச் சேர்க்கலாம். இனிப்புச் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Related Stories: