உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் வகையில் இன்று அர்ஜென்டினாவில் பொது விடுமுறை

அர்ஜென்டினா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் வகையில் இன்று அர்ஜென்டினாவில் பொது விடுமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது. இதில் மெஸ்ஸி தலைமையிலான சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்துகொள்ள உள்ளது.

Related Stories: