ராஜபாளையம் பகுதிகளில் மாம்பழம் அமோக விளைச்சல் விலையோ ரொம்ப குறைச்சல்

ராஜபாளையம் : ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாங்காய் சீசன் என்பதால் பல்வேறு ரக மாங்காய் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் விலை குறைவாகவே இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் தாலுகா பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா விவசாயம் நடக்கிறது. குறிப்பாக ராஜபாளையம் தாலுகா பகுதிகளில் சப்பட்டை மாங்காய், மாம்பழத்திற்கு தனிருசி உண்டு. ராஜபாளையத்தில் இருந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் மாம்பழங்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படும். இப்பகுதிகளில் சப்பட்டை, பஞ்சவர்ணம், கிளி மூக்கு போன்றவை அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஒட்டுரக மா விவசாயம் நடப்பதால், அதிக எடை கொண்ட மாங்காய்கள் கிடைக்கின்றன. இந்த அதிக எடை கொண்ட மாங்காய், மாம்பழங்களை ஆச்சர்யத்துடன் பார்த்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராஜபாளையம் பகுதிகளில் தற்போது மாங்காய் வரத்து அதிகம் உள்ளது. ஆனால் விலை குறைவாகவே விற்கப்படுகிறது. இப்பகுதியில் பல ஆண்டு கோரிக்கையான பழம் பதப்படுத்தும் கூடாரங்களை அரசு அமைத்து தர வேண்டும். எனவும் மேலும் அரசு கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்….

The post ராஜபாளையம் பகுதிகளில் மாம்பழம் அமோக விளைச்சல் விலையோ ரொம்ப குறைச்சல் appeared first on Dinakaran.

Related Stories: