மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: சீனாவில் மருந்து பற்றாக்குறை

பீஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மாதம்  கடுமையான கோவிட் -19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு வீதிக்கு வந்து  மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். அதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பின்னர், தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றன. இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், பிற நோய்களைக் காரணம் காட்டி கொரோனா இறப்புகள் மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வருகின்றன. வயதானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால், அவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் உரிய மருந்துகள் கிடைக்காமல் மருத்துவமனைகளில் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதால், முக்கிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தொழில்துறை அமைச்சக அதிகாரி ஜூ ஜியான் தெரிவித்தார்.

Related Stories: