திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 272 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர்

திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிக்கு ரூ.30.87 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி இயந்திரத்தை, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 272 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.30.87 லட்சம் மதிப்புள்ள மானியத்திட்டத்தின் கூடிய ஜேசிபி இயந்திரத்தினையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.  

Related Stories: