புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அனுமதி கேட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் எமெர்ஜென்சி என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. அவர் தயாரித்து இயக்கும் இப்படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளை நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி உள்ளார்.