சேலத்தில் அதிகளவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சேலம்: அதிகளவு மூட்டு அறுவை சிகிச்சை செய்து சேலம் எடப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். நவம்பர் மாதத்தில் மட்டும் 6 மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த 13 வயதான தர்ஷினி, 2 வயதுடைய தர்ஷன் ஆகிய இருவர் பெருமூளைவாதம் ஏற்பட்டு கால்கள் நடக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இவர்கள் இருவரையும் பரிசோதித்த எடப்பாடி அரசு மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீபாலாஜி தசை சிதைவு மற்றும் தசை சுருக்கம் ஏற்பட்டதை கண்டறிந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இதைபோன்று 40 வயதுடைய ராஜா என்கிற மாற்று திறனாளிக்கு இடுப்பு எலும்பு தேய்மானம் இருந்ததை கண்டறிந்து இடுப்பு எழும்பு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் நோயாளிகள் நிலையை வீடியோ ஆதாரத்தில் வெளிபடுத்தினர். தனியார் மருத்துவமனைக்கு நிகராக மாற்றுதிறனாளிக்கு மட்டுமின்றி இதர நோயாளிக்கு என நவம்பர் மாதம் மட்டும் 6 பேருக்கு எழும்பு முறிவு மூட்டு அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்ததால் சேலம் மாவட்டம் அளவில் எடப்பாடி அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

Related Stories: