சென்னை: சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’, ‘கொடிவீரன்’, கார்த்தி நடித்த ‘கொம்பன்’, ‘விருமன்’, விஷால் நடித்த ‘மருது’, கவுதம் கார்த்திக் நடித்த ‘தேவராட்டம்’, விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய எம்.முத்தையா, தற்போது ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதற்கு ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ஜீ ஸ்டுடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு ேஜாடியாக நடித்திருந்த சித்தி இட்னானி, சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து வருகிறார்.