தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் தென்கிழக்கே 440 கி.மீ. முதல் காரைக்காலில் 350 கி.மீ. தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நள்ளிரவு முதல் மாண்டஸ் புயல் கரையை கடக்கும். டிசம்பர் 10-ம் தேதியும் வட தமிழ்நாட்டில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.

புயல் கரையை கடக்கும் போது மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். மாண்டஸ் புயல் தீவர புயலாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிகை விடுத்துள்ளது.

Related Stories: