5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு..!

டெல்லி: 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல பீகார் - குர்ஹானி, சத்தீஸ்கர் - பானுபிரதாப்பூரி, ராஜஸ்தான் - சர்தர்ஷாஹரி, ஒடிசா - பதம்பூர், உ.பி. ராம்பூர், கதாலி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை குஜராத்தில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 35 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் 27 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் ராம்பூர் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அகமது அசிம் ராஜா 13,080 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கதாலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய லோக்தள வேட்பாளர் மதன்பையா 19,317 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கதாலி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 11,470 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். பீகாரில் குர்ஹானியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் மனோஜ் சிங் முன்னிலையில் உள்ளார். சத்தீஸ்கர்: பனுப்ரதாபூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை, ஒடிசா: பதாம்பூர் சட்டமன்ற தொகுதியில் பிஜு ஜனதா தளம், ராஜஸ்தான்: சர்தார்சாஹர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

Related Stories: