கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இன்று சொக்கப்பனை ஏற்றப்பட்டது

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை இன்று ஏற்றப்பட்டது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர தினத்தன்று மலை கோவில்களிலும், பவுர்ணமி தினத்தன்று சர்வ ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அதன்படி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில்  கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

இதையொட்டி ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் 7ம் தேதி மாலை 6 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

பின்னர் அங்கு கோபுரத்திற்கும் நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதனை ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கண்டருளுனினர். சுவாமி, அம்பாளுக்கும், முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். அதன் பின் சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் 4ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக  அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். அங்கு ஏற்றப்படும் சொக்கப்பனையை சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள்  கண்டருளுளினர்.

பின்னர் தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர். அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி ந கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

Related Stories: