தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோயில்களில் மண் விளக்குகளில் தீப ஒளி ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.வரும் 6ம் தேதி தீப திருநாளை முன்னிட்டு சிதம்பரம் நகரில் வடக்கு வீதி, மேலவீதி, தெற்கு வீதி, கீழவீதி, காந்தி சிலை, காசு கடைத்தெரு,  தெற்கு சன்னதி ஆகிய பகுதிகளில் அகல் விளக்குகள் விற்பனைக்கு அதிக அளவு வந்துள்ளது.

சிறிய அகல் விளக்குகள் 5 எண்ணிக்கை கொண்டது 10 ரூபாய்க்கும், சற்று பெரிய அளவு உள்ள 3 அகல் விளக்குகள் 10க்கும், சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது.உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. கோயில்களுக்கும், தீப கம்பங்களுக்கும் ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் விருத்தாசலம் பகுதியில் இருந்து பல்வேறு வடிவங்களில் மண் அகல் விளக்குகள் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளது.

Related Stories: