சாலை விரிவாக்க பணிக்கு வெட்டியபோது மரம் விழுந்து பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

மரக்காணம்: மரக்காணம் திண்டிவனம் சாலையை நான்கு வழி சாலையாக அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதனால் மரக்காணம் முதல் திண்டிவனம் வரையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மரக்காணம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் அருகில் இருந்த மரங்களை நேற்று தொழிலாளர்கள் வெட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மரம் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்துள்ளது. இதனால் சுற்றுசுவரின் ஒரு பகுதி இடிந்து சேதமாகிவிட்டது. அப்பொழுது அந்த இடத்தில் மாணவர்கள் இல்லாததால் எவ்வித பாதிப்பும் இல்லை. எனவே மரம் விழுந்து இடிந்து போன பள்ளியின் சுற்று சுவரை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பள்ளியின் நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: