ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருப்பதி வருகை

திருப்பதி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதிமுர்மு, ஆந்திர மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மதியம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வருகிறார். அங்கு இந்திய கடற்படை தின விழாவில் பங்கேற்று கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை ெதாடங்கி வைத்து பார்வையிடுகிறார். பின்னர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு கர்நூலில் சாலை விரிவாக்க பணியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் திருப்பதி புறப்படும் ஜனாதிபதி, இரவு 9.15 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். பின்னர் திருமலைக்கு சென்று பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை காலை 9.30 மணிக்கு ஆதிவராக சுவாமி மற்றும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.

தொடர்ந்து காலை 11.55 மணியளவில் பத்மாவதி பல்கலைக்கழகத்துக்கு சென்று அங்கு மகளிர் குழுவினர் தயாரித்த பொருட்களை பார்வையிடுவதுடன் பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து 12.50 மணிக்கு பத்மாவதி தாயார் கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து 1.40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்று டெல்லி திரும்புகிறார்.

Related Stories: