ராஜஸ்தானில் 5 பேர் கும்பல் துணிகரம் பிரபல தாதா உட்பட 2 பேர் சுட்டு கொலை

சிக்கார்: ராஜஸ்தானில் 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி உட்பட 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ராஜஸ்தானை சேர்ந்த பிரபல ரவுடி ராஜூ தேத் நேற்று சிக்காரில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது 5 பேர் கும்பல் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதில் ராஜூ தேத் உள்பட 2 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தையடுத்து சிக்கார் நகரில் பதற்றம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியான இன்னொருவர் தாராசந்த் என கண்டறியப்பட்டுள்ளது. தாராசந்த்தை ராஜூ தேத்தின் உதவியாளர் என சந்தேகத்தில் அவரை சுட்டு கொன்றுள்ளனர். ராஜூ தேத்துக்கும்,  ஆனந்தபால் சிங் என்ற ரவுடிக்கும் பகை இருந்து வந்தது. 2017ம் ஆண்டு நடந்த என்கவுன்டரில் ஆனந்த்பால் சுட்டு கொல்லப்பட்டான். அதற்கு பழிவாங்கவே அவரது ஆதரவாளர்கள்தான் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆனது.

Related Stories: