சரத்குமார் அறிவிப்பு உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை:  போதை ஒழிப்பிற்காக சமக நடத்தவிருந்த  உண்ணாவிரத போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி தரவில்லை. சென்னை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு வழங்கப்பட்டு, அனுமதி கோரி இருந்தோம். காவல்துறை சில இடங்களில் அனுமதி மறுத்தது. இதனால், அனைத்து இடங்களுக்கும் நீதிமன்றத்தை நாடி முறையான அனுமதி பெற்ற பின்னர், விரைவில் உண்ணாவிரதம் நடத்துவதற்கான மாற்று தேதி அறிவிக்கப்படும்.

Related Stories: