டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் மிர்புரில் நடக்கிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து வங்கதேச அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தமிம் இக்பால் விலகியுள்ளார்.