'என் மீது அளவு கடந்த பாசத்தை கொண்டவர் எம்.ஜி.ஆர்'அவர் படங்களை முதல் ஆளாக டிக்கெட் வாங்கி பார்ப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் எனும் நுழையும் வெளியிட்டார். பின்னர் பேசிய முதல்வர்; எம்ஜிஆர் அதிமுகவை விட திமுகவில் தான் அதிக காலம் இருந்தார். 1952 முதல் 1972 வரை திமுகவில் எம்ஜிஆர் இருந்தார். 1972க்கு பிறகு தான் அதிமுகவை தொடங்கினார். தனிக்கட்சி கண்டாலும் எம்.ஜி.ஆர். Annaist (அண்ணாவின் கொள்கையாளர்) ஆகவே இருந்தார். தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி. ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

உடல் வலிமை போன்று மனவலிமையும் முக்கியம். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக்க துணையாக இருந்தவர் கலைஞர். எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எம்ஜிஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக பார்ப்பேன். என் மீது அளவு கடந்து பாசத்தையும், அன்பையும் கொண்டவர் எம்ஜிஆர். என் மீது மட்டுமல்ல, என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர் எம்ஜிஆர். நல்லா படி என்று அறிவுரை சொல்லி, கலைஞருக்கு கிடைக்காத கல்வி, உனக்கு கிடைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி, உன் பெரியப்பா என்ற முறையில் இதை சொல்கிறேன் என்று எம்.ஜி.ஆர் எனக்கு அறிவுரை சொன்னார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி ஆகியோர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்துக்கு கதைவசனம் எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர். தமிழ்நாட்டின் மூன்று முதலமைச்சர்கள் பங்கெடுத்த பெருமைக்குரிய படம் மருதநாட்டு இளவரசி. தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை, திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி. “சைகை மொழியை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக்க வேண்டும்; செவி, பேச்சுக்குறைபாடு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகச் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்; நிச்சயமாக நிறைவேற்றப்படும் இவ்வாறு கூறினார்.

Related Stories: