செல்போனில் ஆபாசமாக பேசி காங். பெண் எம்பிக்கு தொல்லை

பாலக்காடு: கேரள மாநிலம் ஆலத்தூர் காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் (40). கடந்த சில நாட்களாக இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஒருவர் ஆபாசமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் தகாத வார்த்தை மற்றும் மிரட்டல் விடுக்க தொடங்கினார். உடனே ஆலத்தூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் எண்ணை வைத்து தேடி வந்தனர். மிரட்டல் விடுத்தவர் கோட்டயம் மாவட்டம் துமரம்பாறையை சேர்ந்த ஷிபுகுட்டன் (48) என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: