ஹீரோவுடன் சண்டை போட்டு படத்திலிருந்து விலகினார் அனுபமா

ஐதராபாத்: ஹீரோவுடன் சண்டை ஏற்பட்டதால் படத்திலிருந்து அனுபமா பரமேஸ்வரன் விலகிவிட்டார். தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்திருந்தார். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கில் டிஜே தில்லு 2 படத்தில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே வெளிவந்த டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோவாக சித்து ஜோன்னலசட்டா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு அனுபமா தாமதமாக வந்திருக்கிறார். இதுபோல் சில நாட்கள் லேட்டாக வந்ததால், அவருக்காக சித்து காத்திருந்திருக்கிறார்.

இது தொடர்பாக திடீரென அனுபமாவிடமே சித்து கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது சித்துவுக்கும் அனுபமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை இயக்குனர் சமதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் இருவரும் சண்டை போட்டுக்கொண்டு படப்பிடிப்பிலிருந்து வெளியேறிவிட்டனர். மறுநாள் நடந்த ஷூட்டிங்கிற்கு சித்து வழக்கம்போல் வந்துவிட்டார். ஆனால் அனுபமா வரவில்லை. படத்திலிருந்து விலகுவதாக கூறி, அட்வான்ஸையும் தயாரிப்பாளருக்கு திருப்பி தந்துவிட்டார். இப்போது அவரது வேடத்தில் மடோனா செபஸ்டியன் நடிக்கிறார்.

Related Stories: