தீவிரவாத தொடர்பு குறித்து 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் ரவுடி கும்பலுக்கும் இடையேயான தொடர்பு குறுித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) டெல்லி உட்பட 5 மாநிலங்களில் 13 இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தியது. பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை தொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சர்வதேச தீவிரவாத கும்பலுக்கும், உள்நாட்டில் குற்றங்கள் செய்து விட்டு வெளிநாடு தப்பிய சில தாதாக்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அத்தகைய நபர்கள் மூலமாக தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் ஆயுத கடத்தல் மற்றும் கொலை குற்றங்களை நிகழ்த்தியது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் ரவுடிகளுக்கும் இடையேயான தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் டெல்லி, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா மற்றும் சண்டிகரில் நேற்று 13 இடங்களில் சோதனை நடத்தினர். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தீவிரவாதிகளுக்கும் ரவுடி கும்பல், போதை மருந்து கடத்துபவர்கள், ஆள்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இன்றைய சோதனை நடத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: