அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரியலூர்: அரியலூரில் 74 முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரியலூர் விழாவில் 57 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.78 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரியலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெருமையை கொண்ட மாவட்டம் அரியலூர் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்ட அறியலூர் என்று தெரிவித்துள்ளார். எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர் என்று முதலவர் கூறியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தை பிரித்து அரியலூர் மாவட்டத்தை உருவாக்கியவர் கலைஞர் என்று கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொல்லியல்துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கி உள்ளோம் என்று கூறியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அறியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக்கிற்கு விடு ஒதுக்கீட்டு ஆணையை நேரில் சென்று வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் காரிடார் திட்டம் செயல்படுத்தப்படும். அரியலூர் - செந்துறை வரை ரூ.129 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும். அரியலூர் மாவட்டத்தில் ரூ.10 கோடி மதிப்பில் புதை படிம பூங்கா அமைக்கப்படும். போட்டி போட்டு கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்று தமிழகத்துக்கு வருகின்றது. தமிழகத்தில் வேளாண் உற்பத்தி, பாசன பரப்பு அதிகரித்துள்ளது. கட்டணமில்லாமல் பேருந்து வசதி அளித்தன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.900 சேமிப்பு என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.என்று முதலவர் தெரிவித்துள்ளார்.  

ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது என முதலமைச்சர் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதனக்குறிச்சி, குருவாடி, கோவிலூர், எரக்குடி, பொய்யாதநல்லூர், அருங்கால், சுப்புராயபுரம், கருப்பிலாக்கட்டளை, கீழநத்தம், இலையூர் மற்றும் காட்டாத்தூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், அங்கனூர், குமிழியம், குருவாடி, மணக்கால், பொய்யாதநல்லூர், பொய்யூர், தா.பழூர் ஆகிய இடங்களில் 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 செவிலியர் குடியிருப்புகள், 61 இலட்சம் ரூபாய் செலவில் அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள நீராவி சலவையகக் கட்டடம்,  தா. பழூர் மற்றும் இடையக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 புறநோயளிகள் சிகிச்சை பிரிவுக் கட்டடங்கள், ஜெயங்கொண்டத்தில் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக் கட்டடம்; கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆர்.எஸ். மாத்தூரில் 34 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடம், உடையார்பாளையத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடைப்பராமரிப்பு மற்றும் மருந்துப்பணிகள் துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம்,  கூட்டுறவுத் துறை சார்பில் பொன்பரப்பி, பரணம், புதுப்பாளையம், பொய்யூர், முத்துசேர்வாமடம், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான் மற்றும் ஆண்டிமடம் ஆகிய இடங்களில் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கான 8 அலுவலகக் கட்டடங்கள் முடிவுற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆண்டிமடத்தில் 23 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டடம், திருமானூரில் 17 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட நிலஅளவையர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கருப்பிளாக்கட்டளை, தத்தனூர் மேலூர், பிள்ளைப்பாளையம் மற்றும் தென்கச்சி பெருமாள் நத்தம் ஆகிய இடங்களில் 36 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 அங்கன்வாடி மையக் கட்டடங்கள், நமங்குணம், துளார், எருத்துக்காரன்பட்டி, உடையார்பாளையம் மற்றும் சின்னவளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 25 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 சமையற் கூடங்கள், குமிழியம், ஆதனக்குறிச்சி, இலந்தைக்கூடம் மற்றும் குருவாலப்பர் கோவில் ஆகிய இடங்களில்  84 இலட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், கீழநத்தத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிராம நியாயவிலைக் கட்டடம், பருக்கல்லில் 5 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரங்க மேடை கட்டடம், இருகையூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 13 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவை திறந்து வைத்துள்ளார்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உடையார்பாளையத்தில் 42 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பூங்கா என மொத்தம் 30 கோடியே 26 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 51 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அரியலூர் வட்டம், மேலப்பழுவூர் மற்றும் இலந்தைகூடம் ஆகிய இடங்களில் தலா 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அரியலூரில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்ட வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள புதிய பெட்ரோல் பங்க் என மொத்தம் 1 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 5,289 பயனாளிகளுக்கு ரூ.7.66 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1,576 பயனாளிகளுக்கு ரூ.12.03  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1,300 பயனாளிகளுக்கு ரூ.19.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 297 பயனாளிகளுக்கு ரூ.14.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 176 பயனாளிகளுக்கு ரூ.16.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் 58 பயனாளிகளுக்கு ரூ.26.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத் துறையின் சார்பில் 9,000 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.1.64 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் 113 பயனாளிகளுக்கு ரூ.12.27 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 3,524 பயனாளிகளுக்கு ரூ.3.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்

பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பில் 5,611 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தாட்கோ திட்டத்தின்கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.53.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவி, மாவட்ட தொழில் மையம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.11.37 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.11.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த விழாவில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் .கே. சின்னப்பா, .க.சொ.க. கண்ணன், எம். பிரபாகரன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: