மளமளவென சரியும் தங்கத்தின் விலை; சென்னையில் சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் குறைந்து ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சரவனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த இரு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.258 வரை விலை குறைந்துள்ளது நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 31 ரூபாயும், சவரனுக்கு 248 ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,947ஆகவும், சவரன், ரூ.39,576 ஆகவும் இருந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 31 ரூபாய் சரிந்து ரூ.4,916 ஆகவும், சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ரூ.39 ஆயிரத்து 328ஆக வீழ்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,916க்கு விற்கப்படுகிறது.

Related Stories: