சாவிலும் இணை பிரியாத தம்பதி

முசிறி: திருச்சி பாலக்கரை இரட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள்(86). கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மூத்த மகன் ரவீந்திரன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள 3வது மகன் ஆறுமுகம் வீட்டிலும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சம்பூரணத்தம்மாள் நேற்று அதிகாலை இறந்தார். இதுபற்றி அண்ணன் ரவீந்திரனிடம் ஆறுமுகம் கூறினார். இதைத்தொடர்ந்து தாய் இறந்ததை ரவீந்திரன் தனது தந்தை கிருஷ்ணனிடம் கூறினார். மனைவி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் அடுத்த சில நிமிடங்களில் அவரும் மயங்கி விழுந்து இறந்தார்.

Related Stories: