டெல்லி எலக்ட்ரானிக் சந்தையில் பயங்கர தீ; மீட்புக் குழு விடிய விடிய அணைத்தது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் சந்தையில் நேற்றிரவு 9.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்த தகவல்அறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் 40 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த பகுதியின் சாலைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதுகுறித்து டெல்லி தீயணைப்பு பிரிவு இயக்குநர் அதுல் கர்க் கூறுகையில், ‘சாந்தினி சவுக்கில் ஏற்பட்ட தீயால், பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இன்று காலை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. அப்பகுதியில் இருந்த பிரதான கட்டிடம் மெதுவாக இடிந்து விழுந்து வருகிறது. அப்பகுதியில் ெபாதுமக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: