போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கூட்டுறவு துறை எச்சரிக்கை

சென்னை: போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.

ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்காமல், பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்திகள் பெறப்படுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை மூலம் கட்டுப்பாட்டு பொருட்களும் சிறப்பு விநியோக பொருட்களும் வாங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரேசன் கடைகளில் வழங்கப்படாத பொருட்களுக்கு குறுஞ்செய்திகள் பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்களில் உள்ள முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் போலி பில் போடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்படும்  கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.

Related Stories: