7,000 அரசு பள்ளிகள் மூடல், மோர்பி பால விபத்து!: குஜராத்தில் டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்..பாஜக ஆட்சியை விமர்சித்து பதிவு..!!

காந்திநகர்: குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள 2CModelOfGujarat என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மீ என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. கடந்த 2 நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2CModelOfGujarat என்ற பெயரில் புதிய ஹேஸ்டேக் டிரெண்டாகி உள்ளது.

இதில் 7,000 அரசு பள்ளிகள் மூடல், நாட்டின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் ஒரு குஜராத் பல்கலைக்கழகம் கூட இடம்பிடிக்காதது, நௌசாரி வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் தனியார் ஹோட்டல் கட்டப்பட்டது போன்றவை இடம்பிடித்துள்ளன. அதேபோல கடந்த 3 ஆண்டுகளில் அதானி துறைமுகங்கள் மூலம் 5,222 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டது, மோர்பி பால விபத்தில் 136 பேர் இறந்தது, குடிநீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகி வருவது பாஜகவினரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: