நம்பியூர், பிலியம்பாளையத்தில் துணிகரம் அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளை

கோபி :  கோபி, நம்பியூர் பிலியம்பாளையத்தில் அடுத்தடுத்து 3 கோயில்களில் கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் பிலியம்பாளையத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பொதுவான  மருதகாளியம்மன், வீரமாத்தியம்மன் கோயில், பெரிய நாச்சியம்மன் மற்றும் கருப்பராயன் கோயில் மணல் காட்டு தோட்டத்தில் உள்ளது.

 இந்த கோயில் பூசாரியாக நம்பியூரை சேர்ந்த பழனிச்சாமி (70)  உள்ளார்.நேற்று முன்தினம் வழக்கம்போல் இந்த கோயில்களில் பூஜை முடித்துவிட்டு  இரவு கோயிலை பூட்டிவிட்டு பழனிச்சாமி வீட்டுக்கு சென்றார். நேற்று மீண்டும் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோயில்களில் இருந்த உண்டியல்களை உடைத்து கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பூசாரி நம்பியூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோயில்களில் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரிகிறது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. 3 கோயில்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: