விசாகப்பட்டினத்தில் இருந்து சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்கள்; வேலூர் வந்தனர்

வேலூர்: விசாகப்பட்டினத்தில் இருந்து சபரிமலைக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று வேலூர் வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் செல்கின்றனர். இதற்காக அவர்கள் ரயில், சுற்றுலா பஸ், வேன், கார் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஒரு சில ஐயப்ப பக்தர்கள் நடைபயணமாக சபரிமலைக்கு செல்கின்றனர்.  

இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 10 ஐயப்ப பக்தர்கள் சைக்கிள் மூலம் சபரிமலை யாத்திரையை கடந்த 14ம் தேதி தொடங்கினார். தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு நேற்று வேலூர் வந்தனர். சபரிமலைக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இக்குழுவினர் நேற்று வேலூர் புரத்திற்கு வந்தனர். சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஐயப்ப பக்தர் குழுவினர் தினமும், 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளவதாக தெரிவித்தனர்.

Related Stories: