திருத்துறைப்பூண்டி தொகுதியில் அதிகம் மாணவர்கள் படிக்கின்றனர்: அசத்தும் கிராமப்புற அரசு மேல்நிலைப்பள்ளி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இயங்கிவரும் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி 1981ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 200 மாணவர்களைக் கொண்டு நடத்தப்பட்டு 2010ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட அளவில் மிகச்சிறந்த பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது 600 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

இது படிப்படியாக உயர்ந்து 2021-22ம் கல்வியாண்டில் 1050க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களை சேர்த்து மாவட்ட அளவில் அரசுப்பள்ளியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள இப்பள்ளியின் தலைமையாசிரியர் தங்கராசு மேற்பார்வையில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்,பள்ளிமேலாண்மைக்குழு ஆகியோரது சீரிய ஒத்துழைப்போடு பள்ளியை சிறப்பாக நடத்திவருகின்றனர்.

பள்ளியின் சிறப்பு: 6 முதல் 10 வரை ஆங்கிலவழிக்கல்வி,11 , 12 வகுப்புகளில் 4 பாடப்பிரிவுகள்,98 சதவீதம் மாணவர் தேர்ச்சி ,காற்றோட்டமான வகுப்பறைகள்,அனைத்து வகுப்பறைகளுக்கும் மின் வசதி, உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம்,மெய்நிகர் கணினி வகுப்பறைகள்,தூய்மையான பள்ளி வளாகம். சுகாதாரமான குடிநீர் வசதி,2014-2015 ஆம் ஆண்டு காமராஜர் விருது பெற்ற பள்ளி,2016-2017, 2017-18ம் ஆண்டுகளில் தூய்மைப்பள்ளிகான விருது பெற்ற பள்ளி,350 புரவலர்கள். 4,00,000 புரவலர் நிதி வைப்புத்தொகைபொதுமக்கள் பங்களிப்புபள்ளியின் வளர்ச்சியில் பரும் பங்கு வகிக்கும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்கழகத்தலைவர் டி.எஸ். கல்யாணாசுந்தரம் சீரிய முயற்சியால் சென்னை சாய்ராம் கல்விக்குழுமத்தின் தலைவர் காலம்சென்ற லியோ முத்துவிடமிருந்து 2019-20ம் கல்வியாண்டில் ரூ.14,00,000/- மதிப்புள்ள ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம் , மற்றும் ரூ.2,00,000- மதிப்புள்ள அறிவியல் ஆய்வகப்பொருட்கள், 2013-14 ஆம் கல்வியாண்டில் பள்ளியின் கட்டிட வசதிக்காக நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.10,50,000- செலுத்தி ரூ.31,50,000- மதிப்புள்ள 6 வகுப்பறைகள் கட்டித்தந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் ராஜரெத்தினம் செயல்தலைவர் இளங்கோவன் இப்பள்ளிக்கு 6 முதல் 8 வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை மீண்டும் நடத்தி சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக இரண்டு தகுதியான ஆசிரியர்களை வழங்கி அவர்களுக்கு ஊதியமும் வழங்கிவருகிறார்கள். தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக 2019-20ம் கல்வியாண்டு முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாணவியர்களுக்கான விடிகே விருதான ரூ.25,000/- மாணவியர்களின் வங்கிகணக்கில் வைப்புநிதியாக வைக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்களின் கலைத்திறனை வளார்க்கும் விதமாக தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக இப்பள்ளிக்கு ரூ.10,50,000- மதிப்புள்ள கலையரங்கம் கட்டித்தரப்பட்டுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் விளையாட்டுத்திறனில் சிறப்பிடம் வகித்து வருகின்றனர்.

உடற்கல்வி ஆசிரியை உதயமலர் மண்டல அளவில், மாவட்ட அளவில் மாணவர்களை அழைத்துச்சென்று லான் டென்னிஸ் போட்டிகளில் 2013-14ம் ஆண்டு 8 முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2018 முதல் ஒவ்வோர் ஆண்டும் லான் டென்னிஸ் டேபிள் டென்னிஸ் டேக்குவாண்டம் ஆகிய போட்டிகளில் மாணவர்களை கலந்துகொள்ளச்செய்து 2018-19ல் 11 சுழல் கோப்பைகளை விருதாகவும் 2022-23ம் ஆண்டு 13 சுழல் கோப்பைகளை விருதாகவும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.  இப்பள்ளியில் தமிழ் மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் , ஆகிய மன்றங்கள் மற்றும் தேசிய பசுமைபடை, ஜூனியர் ரெட்கிராஸ், சாரண சாரணிய இயக்கம் ஆகியவை ஆசிரியர்களின் தலைமையில் தலைமையாசிரியரின் வழிகாட்டுதலோடு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பள்ளியில் ஆண்டுதோரும் இலக்கியமன்ற விழா சிறப்பு விருந்தினர்களை அழைத்து மாணவர்கள் மகிழும் வகையில் நடத்தப்பட்டுவருகிறது.

தமிழ் மன்றத்தில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து வட்டார, மாவட்ட , மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களை கலந்துகொள்ள செய்துள்ளார்கள். 2022-23ம் கல்வியாண்டு மட்டும் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வட்ட அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் மூன்று மாணவர்கள் முதலிடம் பெற்று தலா ரூ.5,000/- பரிசு பெற்றுள்ளார்கள். சாரண சாரணிய இயக்கம் 2011ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் சாரண சாரணிய இயக்கம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. சாரண ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் வழிகாட்டி ஆசிரியை கவிதா ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் 24 சாரண ,சாரணியர்களை ஆளுநர் தேர்வுக்கு பயிற்சி அளித்து இதுவரை 10 ஆண்டுகளில் 240 மாணவ மாணவியர்கள் ஆளுநர் விருது (ராஜ்யபுரஷ்கார் விருது) பெற்றுள்ளனர். கவிதா என்பார் செப்டம்பர் மாதம் சிறந்த சாரணிய வழிகாட்டி ஆசிரியைக்கானவிருது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் சென்னையில் வழங்கப்பட்டுள்ளது.

இளையோர் செஞ்சிலுவை சங்கம்: இளையோர் செஞ்சிலுவை சங்கம் இப்பள்ளியில் அதன் பொறுப்பாசிரியர் அன்புகுமார் மூலம் 6- முதல் 8 வரை பயிலும் மாணவர்கள் மூலம் சமுதாய விழாக்கள் தலைவர்கள் பிறந்தநாள்விழாக்கள் பள்ளி தூய்மை மாணவர் ஒழுக்கம் ஆகியவை மிகசிறப்பாக பள்ளியில் நட்த்தப்படுகிறது. உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சார்ந்த காணொலிகளை காண்பித்து மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்குகின்றனர். திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மாணவர்களைக் கொண்ட 950 மாணவர்கள் மிகச் சிறந்த பள்ளியாகும். பள்ளி சேர்க்கை நேரங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெடும்பலத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயின்று வருகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து 2.5கி.மீ தொலைவில் நெடும்பலம் பள்ளி அமைந்திருந்தாலும் திருத்துறைப்பூண்டி நகரத்தில் உள்ள பெரும்பான்மையான மாணவர்கள் நெடும்பலம் பள்ளியில் பயின்று வருகிறார்கள் அதற்கு காரணம் அந்தப்பள்ளியின் ஒழுங்கு, கட்டுப்பாடு, மாணவர்கள் மீது காட்டும் அக்கறை ஆகும்.இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமையாசிரியர்கள் இந்திராணி, நாகராஜன், அருள்மணி, செல்லத்துரை மற்றும் தற்போது தலைமையாசிரியராக பணியாற்றிவரும் தங்கராசு ஆகியோர் தமிழக அரசால் வழங்கப்படும் உயரிய விருதான மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) பெற்ற நல்லாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மன்றத்தில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து வட்டார, மாவட்ட , மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்களை கலந்துகொள்ள செய்துள்ளார்கள். 2022-23ம் கல்வியாண்டு மட்டும் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வட்ட அளவில் முதலிடம் பெற்று மாவட்ட அளவில் மூன்று மாணவர்கள் முதலிடம் பெற்று தலா ரூ.5,000/- பரிசு பெற்றுள்ளார்கள்.

Related Stories: