வரத்து கால்வாய் தூர்வரப்படாததால் நீர் வரத்து இல்லாத பாவாலி கண்மாய்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், பெரும்பாலான கண்மாய்கள் நிறைந்து வருகிறது. விருதுநகர் அருகே பாவாலி கிராம கண்மாய்க்கு அருகே நீர் வரத்து இல்லாததால் வறண்டுகிடக்கிறது. விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராம மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளன. பாவாலி கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய்க்கு வரும் மழைநீரை நம்பி 100 ஏக்கரிலான விவசாய நிலங்கள் உள்ளன. சீனியாபுரம் புது கண்மாய் நிறைந்து வரும் நீரில் பாவாலி கண்மாய் நிறைந்து, விவசாயம் நடந்து வந்தது.

செங்குன்றாபுரம் கண்மாய் நிறைந்து வரும் மழைநீர் புதுகண்மாயுடன் நின்று விடுகிறது. புது கண்மாயில் இருந்து பாவாலி கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக து£ர்வாரப்படவில்லை. மேலும் பாவாலி கண்மாயின் இரு மடைகளும் இடிந்து கிடக்கின்றன. இரு மடைகளை இடித்து கட்ட வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் எழுப்பி வரும் குரல் மாவட்ட நிர்வாகங்கள் அலட்சியம் செய்து வருகின்றன. 30 ஆண்டுகளாக கரையை பலப்படுத்த வேண்டும், மேற்கு பகுதி நீர் வெளியேறும் கலுங்கில் இருந்து நீர் வரத்து கால்வாய் சீனியாபுரம் பொதுப்பணித்துறை கண்மாய் சட்டர் வரை கால்வாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும்.

கண்மாய் வெளியேறும் கல்வாய் கரைகளை இருபுறமும் சரி செய்ய வேண்டும். கால்வாய் மேற்கு பகுதியில் சீனியாபுரம் கிராமமும், தொடக்கப்பள்ளி இருப்பதால் மேற்கு பகுதிகளை கரைகளை சரி செய்ய வேண்டுமென்ற பாவாலி கிராம விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து சமூக ஆர்வலர் வடிவேல் கூறுகையில், ‘‘பாவாலி கிராம கண்மாயை நம்பியே 100 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. கண்மாய் சீரமைப்பு பணிகள் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் கரைகள், மடைகள், கலுங்குகள் சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே கண்மாயை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: