பஸ் பயணத்தில் கசப்பான அனுபவம்: ஆண்ட்ரியா பகீர்

சென்னை: ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: என் தோற்றத்தை வைத்து, நான் நகரத்து மாடர்ன் பெண் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரக்கோணத்தில் ஒரு சிறிய டவுனில் வளர்ந்து, ஒரே ஒரு அறை இருந்த வீடு, பின்னர் இரண்டு அறைகள் இருந்த வீடு, அதன் பின் ஒரு அப்பார்ட்மென்ட் என்று வாடகைக்கு இருந்து பின்னர் அதே அபார்ட்மென்ட்டை சொந்தமாக வாங்கி படிப்படியாக வளர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள்.இதுவரை இரண்டே இரண்டு முறைதான் பஸ்சில் பயணம் செய்துள்ளேன். 11 வயது இருக்கும்போது வேளாங்கண்ணிக்கு பஸ்சில் சென்றபோது யாரோ என் முதுகில் கை வைப்பது போல் இருந்தது.

திடீரென்று அந்த கை எனது டி-ஷர்ட் உள்ளே சென்றதும் பயந்து போய் இருக்கையில் சற்று முன்னே சென்று அமர்ந்து கொண்டேன். இதேபோல கல்லூரிக்கு ஒரு முறை பஸ்சில் சென்றபோதும் நடந்தது. அன்று முடிவு செய்தேன் இனிமேல் பஸ்சில் செல்லக்கூடாது என்று. பஸ்சில் செல்ல வேண்டாம் என்ற வாய்ப்பு எனக்கு இருந்தது, ஆனால் பல பெண்களுக்கு அப்படி வாய்ப்புகள் அமைவதில்லை. இந்த மாதிரி அத்துமீறல்கள் பற்றித்தான் நான் நடித்துள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படம் பேசியிருக்கிறது. இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

Related Stories: