தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ. மழை பதிவு..!!

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கொள்ளிடம் 32 செ.மீ., சிதம்பரம் 31 செ.மீ., அண்ணாமலை நகர் 28 செ.மீ., புவனகிரியில் 21 செ.மீ., மழை பொழிந்துள்ளது. கொத்துவாச்சேரி, கே.எம். கோயிலில் தலா 19 செ.மீ., தரங்கம்பாடி, பரங்கிப்பேட்டையில் தலா 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை, மணல்மேடு, சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடியில் தலா 16 செ.மீ. மழை கொட்டியது. காங்கேயம் 15 செ.மீ., பொன்னமராவதி, வெள்ளக்கோயிலில் தலா 13 செ.மீ., வடகுத்து, மயிலம்பட்டியில் தலா 12 செ.மீ. மழை பதிவானது.

இதேபோல் உளுந்தூர்பேட்டை, கறையூர், வேடசந்தூர், வானமாதேவி, காரைக்கால், திருப்பூர், வேப்பூரில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. பரமத்தி வேலூர், அகரம் சீகூர், செய்யூர், பண்ருட்டி, கோலியனூர், காட்டுமயிலூரில் தலா 10 செ.மீ. மழை, பாடாலூர், திண்டுக்கல், வளவனூர், பெலன்துறை, மஞ்சளாறு, கடலூர், ராசிபுரம், ஊத்துக்குழி, தாராபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து, கீழச்செருவை, தொழுதூர், சென்னை எம்.ஜி.ஆர் நகர், குப்பநத்தத்தில் தலா 9 செ.மீ., லெப்பைகுடிக்காட்டில் 8 செ.மீ. மழை பொழிந்தது.

சென்னை அண்ணா பல்கலை, அய்யம்பேட்டை, திருப்பூர், கே.பரமத்தி, தஞ்சை, பல்லடம், மாகாணத்தில் தலா 8 செ.மீ. மழையும், திருச்சுழி, மரக்காணம், ஆவடி, கோடநாடு,  லக்கூர், உத்திரமேரூர், உதகை, திருமயம், அரிமளத்தில் தலா 8 செ.மீ. மழை யும் பெய்தது. திருக்கழுக்குன்றம், பெரம்பூர், மதுராந்தகம், பாடலூரில் தலா 8 செ.மீ., குந்தா அணை, சூரப்பட்டில் தலா 7 செ.மீ. மழையும், நாமக்கல் ஆட்சியரகம், முளனூர், வந்தவாசி, கரூர், முண்டியம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழையும் பதிவானது. மாமல்லபுரம், திண்டிவனம், அம்பத்தூர், அவிநாசி, தியாகதுருகம், கரூர், பூவிருந்தவல்லியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: