மதம், மொழி, இனத்தின் பெயரை சொல்லி அரசியல் ஆதாயம் அடைய பார்ப்பதா? பாஜவுக்கு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: மதம் மாறிய தலித்களுக்கும் தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறை சூழல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. ஆகவே, மதம் மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா போன்ற மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் இந்து, புத்தம், சீக்கியம், ஜெயனம் மதங்கள் போன்று கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை பின்பற்றுபவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், உலகில் அதிக எண்ணிக்கையில் இந்த மதங்களை பின்பற்றக்கூடிய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மதத்தின் பெயரால், மொழி பெயரால், இனத்தின் பெயரால் சொல்லி அரசியல் செய்து ஆதாயம் அடைய பார்க்கும் ஒன்றிய பாஜ அரசின் இந்த நடவடிக்கையை இதோடு நிறுத்தி கொள்வதோடு, மதம் மாறிய கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு தலித் மக்களுக்கு வழங்கப்படும் சலுகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: