தொடர் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம்: அமைச்சர் கே.என் நேரு பேட்டி

சென்னை: சென்னையில் மாநகரட்சி எடுத்துள்ள நடவடிக்கைகளால் மழைநீர் தேங்குவது பெருமளவு தவிர்க்கப்பட்டுளளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் அவசரகால மற்றும் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி மேயர், துணை மேயர், ஆணையர் ஆகியோர் இருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 6 செ.மீ மழை பெய்ததாக தெரிவித்தார். தேவைப்படும் இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்படுவதாகவும், 16 சுரங்கபாதைகளிலும் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சென்னையில் மழைநீர் தேங்குவதாக இதுவரை 34 புகார்கள் மட்டுமே பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டிருபப்தாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த வாரம் மழை நீர் தேங்கிய பட்டாளம், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது கனமழைக்கு போராகும் மழைநீர் தேங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் 169 நிவாரண மையங்கள், ஒரே நேரத்தில் 2 லட்சம் உணவு பொட்டலம் தயாரிக்க சமையல் கூடங்கள் தயார்நிலையில் உள்ளதாகவும், கனமழை பெய்தாலும் சென்னையில் மழைநீர் தேங்காது எனவும் அமைச்சர் கூறினார்.

இதனை தொடர்ந்து புளியந்தோப்பு, புதுப்பேட்டை, ஜிபி சாலை, உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தர்.

Related Stories: