பாணாவரம் அருகே கூத்தம்பாக்கத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகள் பெயர்ந்து விழுகிறது-புதிய வீடுகள் கட்டி தர மக்கள் கோரிக்கை

பாணாவரம் :  ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில், 1989-90ம் ஆண்டில் 23 அரசு தொகுப்பு வீடுகள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு கட்டித் தரப்பட்டது. 32 ஆண்டுகளுக்கு மேலான இத்தொகுப்பு வீடுகள் பழுதடைந்து,  கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.   

இந்நிலையில், பொம்மி என்ற மூதாட்டி வசித்து வந்த வீட்டில் திடீரென கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள் மளமளவென பெயர்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார். இதேபோல் பலரது தொகுப்பு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆய்வு செய்து, இடிந்து விழும் நிலையில் உள்ள ெதாகுப்பு வீடுகளை அகற்றி புதிய தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: