டெல்லியில் காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு: சாலைகளில் அடர்த்தியான புகைமூட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி!

புதுடெல்லி: இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 324 என்ற அளவில் பதிவாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் சுவாசிக்கக் கூட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 324 என்ற அளவில் பதிவாகியுள்ளது.

அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசம் என்ற நிலையில் நீடிக்கிறது. ஆனால் கடந்த சில தினங்களை ஒப்பிடுகையில், காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. டெல்லி சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, குருகிராமில் காற்றின் தரக் குறியீடு 371, 349 என்ற அளவில் பதிவாகியுள்ளது. டெல்லியின் அடர்த்தியான புகைமூட்டம் மூண்டு காட்சியளிக்கிறது.

காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள சூழலில், மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த காற்றின் தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள்ளது. அதன்படி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பல்வேறு நிபுணர்கள் குழு வழங்கிய 7 முன்மொழிவு அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: