மாலத்தீவு குடியிருப்பில் தீ 8 இந்தியர்கள் உட்பட 10 பேர் கருகி பலி: குமரி தம்பதியும் உயிரிழப்பா?

மாலே: மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்கி இருந்தனர். இந்த குடியிருப்பின் கீழ் பகுதியில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பலர் தீ விபத்தில் சிக்கினர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயணைத்து பலரை மீட்டனர். இதுகுறித்து மாலேயில் இந்திய துாதரக உயர் அதிகாரி கூறுகையில்,‘தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. பலியானோர்களில் 8 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்,’என்றார்.

மாலத்தீவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தீ முதல் மாடிக்கு பரவியது. அதில் தங்கியிருந்த வெளிநாட்டினர் தீயில் சிக்கி கொண்டனர். தகவல் கிடைத்ததும், மீட்பு படையினர் விரைந்து சென்று 18 வெளிநாட்டினர் உட்பட 31 பேரை மீட்டனர்,’ என்று தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் குமரி  மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட காஞ்சிரகோடு, கொல்லன்விளாகம் சேர்ந்த தம்பதி எட்வின் ஜெனில் (44), சுந்தரி (40) ஆகியோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories: