இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் யார்?.. பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆய்வறிக்கை

பாரிஸ்: இந்தியாவில் உயர்சாதி பிரிவினரின் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சாதி வாரியாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் குறித்த கணக்கெடுப்பை பிரான்ஸை சேர்ந்த பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆய்வு நடத்தியது. இதன் ஆய்வறிக்கையின் படி பழங்குடியினரில் 52% பேர் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், 16% ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், 6% பேர் பணக்காரர்களாக இருபப்தாகவும், 4% பேர் செல்வந்தர்களாக இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் 30% பேர் மிகவும் வருகிய நிலையில் உள்ளனர். 25% பட்டியலினத்தவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், 22% பேர் பணக்காரர்களாக இருப்பதாகவும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் 9% பட்டியலினத்தவர்கள் செல்வந்தர்களாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 20% பேர் மிகவும் வறுமை நிலையில்  இருப்பதாகவும், 20% பேர் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும், 19% பேர் பணக்காரர்களாக இருப்பதாகவும், 18% பேர் செல்வந்தர்களாக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இஸ்லாமியர்களில் 22% பேர் மிகவும் வறுமை நிலையில் இருப்பதாகவும், 20% பேர் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

20% பேர் பணக்காரர்களாக உள்ளனர். 19% பேர் செல்வந்தர்களாக உள்ளனர். முற்பட்ட உயர்சாதி வெறுப்பினரை பொறுத்தவரை பார்ப்பனர்களின் 3% பேர் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாகவும் 5% பேர் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், 28% பேர்  பணக்காரர்களாகவும், 49% பேர் செல்வந்தர்களாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: