கூடலூரில் மழைக்காலத்தில் சேதம் அடைந்த பாலம், நடைபாதைகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மழைக்காலத்தில் சேதம் அடைந்த பாலங்கள், நடைபாதைகள் மற்றும் சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த தென்மேல் பருவமழை காலத்தில் அதிகமான மழை பொழிந்தது. வழக்கத்தை விட அதிகமான மழையால் பல்வேறு பகுதிகளில் சிறு பாலங்கள், சாலைகள், நடைபாதைகள் சேதம் அடைந்துள்ளன.

இதனால்  பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி  வருகின்றனர். மங்குழி பகுதியில் பாலம் உடைந்த நிலையில் பொதுமக்கள் நடந்த செல்வதற்கு தற்காலிக நடை பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் காளம்புழா பகுதியில் ஓடும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புறமான வயல் செல்லும் சாலை ஓரத்தில் மன்னரிப்பு  ஏற்பட்டு சாலை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதே போல் கடந்த 2020-ம் ஆண்டு பெய்த கனமழையில் கோல்டன் அவென்யூ, துப்புகுட்டிப்பேட்டை, புறமன வயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடைந்த பாலங்கள் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அடுத்த மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது. மழைக்காலத்திற்கு  முன்பாக இந்த பணிகள் நடைபெறாவிட்டால்  பொதுமக்கள் மேலும் சிரமத்த்திற்கு உள்ளாக நேரிடும்.

எனவே நகராட்சி நிர்வாகம் மழைக்காலத்தில் சேதம் அடைந்த பாலங்கள் நடைபாதைகள் சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: